TamilsGuide

பாலஸ்தீனர்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்ட கோழைகள் - ஹமாஸ் அமைப்பை சாடிய அதிபர் பைடன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 19-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்ட கோழைகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடினார்.

காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment