TamilsGuide

நான்கு நாட்களில் தமிழகத்தில் லியோ படம் செய்த வசூல் 

விஜய் ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் உலகளவில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்திருந்தார்.

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் லியோ படத்தை உருவாகியுள்ளனர். மேலும் ரூ. 487 கோடி வரை இப்படத்தை தயாரிப்பாளர் பிசினஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 380 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே லியோ படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 105 கோடிக்கும் மேல் நான்கே நாட்களில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் லியோ தமிழ்நாட்டு வரும் எத்தனை கோடிகளை தொடப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Comment