TamilsGuide

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு முழக்கமிட்ட நபர் பணியில் இருந்து இடைநீக்கம்

லனடனில் சுரங்க ரயில் சாரதி ஒருவர் பாலஸ்தீன விடுதலை முழக்கமிட்ட நிலையில், தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்புடைய சம்பவமானது சனிக்கிழமை நடந்துள்ளது. குறித்த பாலதீன ஆதரவு பேரணியில் சுமார் 100,000 மக்கள் திரண்டிருந்தனர்.
 
இந்த நிலையில், ஊடகவியலாளர் ஒருவரே அந்த ரயில் சாரதி பாலஸ்தீன விடுதலை குறித்து முழக்கமிடுவதை காணொளியாக பகிர்ந்துள்ளார்.

இதில் ரயில் பயணிகள் பலரும் அந்த சாரதியுடன் பாலஸ்தீன விடுதலை குறித்து முழக்கமிட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த காணொளி தொடர்பில் முறையாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த சாரதி அடையாளம் காணப்பட்டு, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய தூதரகம் தெரிவிக்கையில்,

லண்டன் ரயில்களில் இத்தகைய சகிப்புத்தன்மை இல்லாததைப் பார்ப்பது மிகவும் கவலை அளிக்கிறது. பொதுப் போக்குவரத்து அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் உள்ளடக்கிய இடமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Leave a comment

Comment