TamilsGuide

பதவியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் 06 பேர் உள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர அப்பதவியைப் பொறுப்பேற்றால் சிரேஷ்ட உப தலைவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயரும்.

தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியில் இணைந்தால் அவருக்கு கட்சியின் தலைவர், செயலாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவிகளை தவிர வேறு பதவிகள் வழங்கப்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவருக்கு மூத்த துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

எனினும் தயாசிறி ஜயசேகர தற்போது தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment