TamilsGuide

பாடகர் ஸ்ரனி சிவானந்தன் காலமானார்

ஈழத்தின் புகழ்பெற்ற, வானொலி, மேடை, திரைப்படப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் அவர்கள் 2023 ஒக்ரோபர் 15ம் திகதி காலை, கிளிநொச்சியில் காலமானார். 

1970, 1980 ஈழத்துக்கலைத்துறையின் மிக உன்னதமான காலகட்டம்.
ஆயிரக்கணக்கான மேடைகளில் நின்று பாடல்கள் பாடி பல்லாயிரக்கணக்கான ரசிக நெஞ்சங்களைக் கவர்ந்த காலத்தால் மறக்க இயலாத இனிமைக்குரலோன் ஸ்ரனி சிவானந்தன், கண்ணன் கோஷ்ரியின் ஓர் அடையாளம்.  
காலமெல்லாம் எங்கள் உள்ளங்களில் ஸ்ரனி சிவானந்தன் வாழ்வார். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரின் புகழுடல் ஒக்ரோபர் 15ம் திகதி மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a comment

Comment