TamilsGuide

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது

”2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும்” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.  குறித்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையளத்தில் இன்றையதினம் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பமாகவிருந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி அடுத்த வருடம் ஜனவரி மாதம்வரை பிற்போடப்பட்டிருந்தது.

இதேவேளை, உயர் தரப்பரீட்சைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை இணைய வழியூடாக தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment