TamilsGuide

கருங்கடலில் ரஷ்யா கடல் கண்ணிவெடிகளை பயன்படுத்தவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரேனிய துறைமுகங்களை அணுகுவது உட்பட, கருங்கடலில் பொதுமக்கள் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்த ரஷ்யா கண்ணிவெடிகளை பயன்படுத்தக்கூடும் என பிரித்தானிய எச்சரித்துள்ளது.

உக்ரேனிய துறைமுகங்களுக்கு செல்லும் வழியில் 12 சரக்குக் கப்பல்கள் கருங்கடல் கப்பல் வழித்தடத்தில் நுழையத் தயாராக இருப்பதாக உக்ரைனின் கடற்படை கூறியுள்ளது.

இந்நிலையில் தானிய ஏற்றுமதியை எளிதாக்க உக்ரைன் நிறுவிய வழியாக பயணிக்கும் பொதுமக்களின் கப்பல்களைத் தடுக்க கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதை ரஷ்யா பரிசீலித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் செல்லும் கப்பல்களை வெளிப்படையாக மூழ்கடிப்பதை தவிர்க்கும் ரஷ்யா, உக்ரைன் மீது பொய்யான பழி சுமத்த இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக பிரித்தானிய குற்றம் சாட்டியுள்ளது.

ஆகவே தமக்கு கிடைத்த இந்த உளவுத்துறை தகவலை வெளியிடுவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுப்பதே தமது நோக்கம் என்றும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

கருங்கடலில் என்ன நடக்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் மீது தாக்குதல் பழியை சுமத்த ரஷ்யாவின் இழிவான முயற்சிகளே இதுவென்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய ஏற்றுமதி வழித்தடமான கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப உக்ரைனுக்கு அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா ஜூலையில் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment