TamilsGuide

புதிய மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது.

R21/Matrix-M எனும் குறித்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக கருதப்படுகிறது.

மலேரியாவினால் ஆண்டுதோறும் பெருமளவான பொதுமக்கள் உயிரிழந்து வரும் நிலையில், இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானவர்கள் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதோடு, இது மிகவும் மலிவான தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 247 மில்லியன் பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 619,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment