TamilsGuide

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய ராணுவம்

உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
 
மேலும், பிரித்தானிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உக்ரேனில் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஷாப்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் முடிவை தாம் வரவேற்றாலும், உற்பத்தியை உக்ரைனில் துவங்குவது சிறபாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது BAE அந்த முயற்சியை முன்னெடுக்க இருப்பது போன்று பிற நிறுவனங்கலும் உக்ரைனில் உற்பத்தியை முன்னெடுக்கலாம் என்றார். கடந்த வாரம் உக்ரைன் சென்றிருந்த கிராண்ட் ஷாப்ஸ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார்.

அத்துடன், விளாடிமிர் புடினின் படைகளிடமிருந்து கருங்கடலில் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதில் பிரித்தானிய கடற்படையின் போர்க்கப்பல்களை பயன்படுத்துவதன் சாத்தியம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Leave a comment

Comment