TamilsGuide

கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை - மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை யாதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,

எதிர்கால கொள்கை பிரசாங்கள் குறித்து சுருக்கமாக கூறினால் திருமண தரகர்கள் போன்று இருபுறமும் பேசும் கதை போன்று இருக்கின்றது.

அதை தருகின்றோம் இதை தருகின்றோம் என்று கூறுவார்கள். அதில் அதிகமான விடயங்கள் செய்ய முடியாதவை.

கிரிகெட் சபைக்கு வாக்கெடுப்பு நடத்தி பகிரங்கமாக தான் தெரிவு செய்வார்கள்.

அரசியலில் போன்று ஒரு பட்டியலை எடுத்து கொண்டு வந்து அதில் உள்ளவர்களை அதிகாரிகளாக நியமிக்க மாட்டார்கள்.

கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை. காலி வீதியில் இருந்து பத்தரமுல்லை வரையில் இருக்கும் காரியாலயங்களில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றது.

அரசியல் கட்சியில் தங்களுக்கு ஒரு அசாதாரணம் நிலவும் போது அனைத்து விடயங்களையும் வெளியில் கூறி விடுவார்கள்.

கொள்கை பிரசாரத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் போது இது பிழை என்று யார் கூறினார்கள்.

விவசாயிகளும் இளைஞர்களும் வீதிக்கு வந்த பிறகே அது கூறப்பட்டது. அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் தான் எதிர்க்கட்சிக்கு சென்று அமர்ந்தார்கள்.

இல்லாவிட்டால் யாரும் செல்ல மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Comment