TamilsGuide

ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் 400 மில்லியன் டொலர் கடன் வசதியின் முதல் தவணையைப் பெறும் வகையில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

200 மில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டு கடன் வசதிகளைப் பெறுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஆரம்பகட்ட விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஒவ்வொறு கடன் தொகுதியும் இரண்டு துணைத் திட்டங்களைச் செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் மேலாண்மை கட்டமைப்புகள் மற்றும் நிதித் துறை உறுதிப்படுத்தலை மேம்படுத்துவதையும் இரண்டாவது திட்டம் எதிர்ப்பு நிதி அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

அதன்படி குறித்த கடன் தொகையை 25 வருடத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் 2 விகித வட்டியோடு உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a comment

Comment