TamilsGuide

அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி


கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை    பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு   பிரதான வீதி மற்றும்  கல்முனை -சாய்ந்தமருது   செல்லும் முக்கிய பிரதான வீதிகளிலேயே பொதுமக்கள்  நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி   நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீதியில் பயணம் செய்வோர்  நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் எனவும், தொடர்ச்சியாக  அப்பகுதிகளில் விபத்துக்கள் சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே   இவ்விடயங்களில் உரிய அதிகாரிகள்  கவனம் செலுத்தி, கட்டாக்காலி நாய்களின்   நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பொது மக்கள் கோரிக்கை  தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment