TamilsGuide

ஒரு நாளுக்குள் 16 நாட்கள் வாழ முடியுமா? இவர்களின் வாழ்க்கையில் மட்டுமே சாத்தியம் 

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) பூமியின் ஒரு சுற்றுப்பாதையை 90 நிமிடங்களில் நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வின் காரணமாகவே விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை 45 நிமிட இடைவெளியில் பார்க்க முடிகிறது.

இதன் விளைவாக, ISS இல் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய அஸ்தமனங்கள் மற்றும் சூரிய உதயங்களைக் காண முடிகிறது. சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையிலான வெப்பநிலை வித்தியாசம் 250 டிகிரி பாரன்ஹீட் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

பூமியில் உள்ளவர்களை போல் வாழ முடிவதில்லை

விண்வெளி வீரர்கள் இத்தகைய ஒழுங்கற்ற வெப்பநிலையில் உயிர்வாழக் காரணம் அவர்களின் விண்வெளி உடைகளில் உள்ள சிறப்புப் பொருள்தான்.

விண்வெளியில் அதிக வெப்பம் மற்றும் மிகவும் குளிர்ந்த வெப்பநிலை ஆகிய இரண்டையும் கையாளும் வகையில் இந்த உடை பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி வீரர்கள் தங்களின் வாழ்க்கையை பூமியில் உள்ளவர்களை போல் வாழ முடிவதில்லை. உணவு உறக்கம் இரவு பகல் உற்பட அனைத்தும் அவர்கனின் வாழ்க்கையில் விசித்திரமானதாகவே காணப்படுகின்றது.

உதாரணமாக சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை உதிப்பதுதானே வழக்கம்? பூமியில் மனித நடவடிக்கைகள் அதற்கேற்ப நடக்கின்றன. ஆனால் ஒரு விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்லும்போது, ​​அவருக்கு இரவும் பகலும் புரிவதில்லை.

இதற்கு காரணம் ஒரு நாளைக்கு சூரியன் பல முறை உதித்து மறைந்தால் அதை ஒரு நாள் என்று எப்படி மனிதர்கள் புரிந்துக் கொள்வது? பூமியில் இருக்கும்போது இயல்பாக இருக்கும் அனைத்து விஷயங்களுமே, விண்வெளியில் மாறித்தான் இருக்கும்.

விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் பூமியில் இருப்பதைப் போன்றே, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை.

பூமிக்கு தான் 24 மணித்தியாலம் ஒரு நாள் என்ற கால அளவு. விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் வசிக்கின்றனர்.

அந்த மையமானது, சுமார் 400 கி.மீ உயரத்தில் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருகிறது சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.

நாம் செய்யும் வேலை கடினமானது என்ற எண்ணம் வரும்போது சற்று இவர்களை சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் இந்தளவு கடினமான செயலையும் விரும்பி செய்வதால் தான் சாதனையாளர்களாக இருக்கின்றனர்.  

Leave a comment

Comment