TamilsGuide

49 யூரோ பயணச்சீட்டால் நல்ல பலனை அனுபவிக்கும் ஜேர்மனி

ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்ட 49 யூரோக்கள் பயணச்சீட்டு நல்ல பலனை அளித்துள்ளது. பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் மாற்றம் ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  
நேற்று ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதியில் கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

சுமார் 5.3 பில்லியன் பொதுமக்கள் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இது முந்தைய ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகமாகும். அதே நேரத்தில், 2019ஐ ஒப்பிட்டால் இது 13 சதவிகிதம் குறைவுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்படி பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதற்குக் காரணம் ஜேர்மனி அறிமுகம் செய்த 49 யூரோக்கள் பயணச்சீட்டு என்கிறது புள்ளியியல் அலுவலகம். 

Leave a comment

Comment