TamilsGuide

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய கனடா

உக்ரைனுக்கான நிதியுதவி வழங்கும் கூட்டமைப்பிற்கு கனடா புதிய தொகுப்பாக ரூ.200 கோடி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவதை எதிர்த்து அந்த நாட்டு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
  
இந்த போரில் உக்ரைனுக்கு தேவையான நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் உட்கட்டமைப்பிற்கு தேவையான உதவிகளை வழங்க பிரித்தானியா தலைமையில் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, டென்மார்க், நெதர்லாந்து போன்ற பல நாடுகள் இடம்பெற்றுள்ளனர்.

போர் இடைவிடாமல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்போது உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசிய பிரதமர் ரூட்டோ உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிக்காக சுமார் 4 ஆயிரம் கோடி வழங்குவதாக அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக தற்போது சுமார் ரூ.200 கோடியை உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிடம் கனடா அரசு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a comment

Comment