TamilsGuide

ஓமன் நாட்டில் அஜித்.. வெளிவந்த லேட்டஸ்ட் பைக் வீடியோ 

அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துபாய்யில் துவங்கும் என தகவல் வெளியாகியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

படங்கள் மட்டுமின்றி பைக் ரைடிலும் அஜித் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். உலகம் முழுவதும் பைக் ரைடு செல்ல வேண்டும் என்பது தான் அஜித்துடைய ஆசை என்பதை நாம் அறிவோம். அதற்கான முயற்சியில் தான் தற்போது ஒவ்வொரு நாடாக சென்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓமன் நாட்டிற்கு பைக் ரைடு சென்றுள்ளார். அங்கிருந்து ரசிகர் ஒருவர் அஜித்துடன் உரையாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.. 
 

Leave a comment

Comment