TamilsGuide

இரண்டாம் கட்ட கடன் வசதியை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்த கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாங்கள் ஆரம்பித்த மீளாய்வு கலந்துரையாடல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும்.

இந்த கல்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் ஐ எம் எப் இன் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு நிதி சந்தையில் பிரவேசிப்பதற்கான சக்தியை தான் சர்வதேச நாணய நிதியம் இதனூடாக நமக்கு பெற்றுத் தருகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்றி இருக்கின்றோம்.

சில விடயங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் இடம்பெற்றமையால் சில சட்டமூலங்களை நிறைவேற்ற சிறிது தாமதம் ஏற்பட்டது.

இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்ளவும் அதனூடாக முன்னோக்கி செல்லவும் எமக்கு எந்த பிரச்சினைகளும் ஏற்படாது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்த கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை.

2024 ஆம் ஆண்டில் இருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க எதிர்பார்க்கின்றோம்.
 

Leave a comment

Comment