TamilsGuide

கியூபா ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை, ஹவானாவில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இருதரப்பு உறவுகள் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டிருந்த கியூபா ஜனாதிபதி, பொருளாதார மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கைக்கு ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஆதரவளித்தமைக்கு கியூபா ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா சென்றடைந்தார்.

ஹவானா விமான நிலையத்தில் கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் கார்சியா கிராண்டா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment