TamilsGuide

நோர்வே திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்ற பாலை நிலம் திரைப்படம்

நோர்வே திரைப்பட விழாவில் 4  விருதுகளை வென்ற பாலை நிலம் திரைப்படம் ( September) 17 ஆம் திகதி sunday  woodside சினிமா வில் பி.ப. 1 .30 மணிக்கு MHC /MLC பழைய மாணவர்சங்க ஆதரவில் காண்பிக்கப்படவுள்ளது.

இக்கட்டான உள்ளூர் போரின்பொழுது கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு  இங்கு மருத்துவ வசதிகளின்றி அவதிப்பட்ட தாயின் உயிரை காப்பாற்ற ,காதலியை பிரிந்து இரவோடிரவாக புலம்பெயர்ந்து செல்லும் மக்களோடு சேர்ந்து வள்ளத்தில் இந்தியா செல்லும் காதலன் , பத்து வருடங்களின் பின் தாயின் அஸ்தியுடன் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற நாட்டுக்கு திரும்பிவருகின்றான் . எல்லாவற்றையும் இழந்து ஏழ்மையுடன் சீவிக்கும் தனது தாய் மாமனாரை சந்திக்கின்றான்.போரினால் சிதைவடைந்து உற்றார் உறவினர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் தனது காதலியை மாமனாரின் உதவியுடன் தேடி அலைகின்றான்.எங்கும் வெறுமையையும் அழிவுகளையும் சிதைவுகளை யும் கண்டு வேதனையுறுகின்றான். ஈற்றில் காதலியை கண்டு பிடிக்கின்றானா என்பதை பார்க்க திரை அரங்கத்திற்கு உங்களை அழைக்கின்றோம்.

நாம் வாழ்ந்த வாழ்க்கையை ,எமது பழமையை பார்க்க வாருங்கள்  ,திரையரங்கத்திற்கு

திரைக்கதை ஒளிப்பதிவு இயக்கம் - ஜுட் சுகி

இசை - பிரசாந் கிருஸ்ணபிள்ளை

நடிகர்கள் - ராஜாமகேந்திரசிங்கம்,ரெட்ணகாந்தன்,அபிர்னா,சாயா,விமல்றோய் மற்றும் பலர்

Leave a comment

Comment