TamilsGuide

வவுனியாவில்  வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள்,  வைத்தியசாலை முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டில் வைத்தியர்களுக்கு நிலவிவரும் பற்றாக்குறை காரணமாகவும் தரமற்ற  மருந்துகளின் இறக்குமதியினாலும் சுகாதாரத்துறை பலவீனமடைந்து வருவதாகத் தெரிவித்தே  இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் ‘நாட்டில் மருந்துகள் இல்லை. சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, தனியார் மருத்துவத்தை வளர்க்க இலவச மருத்துவத்தை அழிக்காதே, வைத்தியர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து, வைத்தியர்களை வெளியேற நிர்பந்தித்து இலவச வைத்திய சேவையை முடக்கும் சதியை முறியடிப்போம், திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமையில் கை வைக்காதே’என எழுதப்பட்ட பதாததைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், இலங்கையில் இருந்து பல வைத்தியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். வைத்தியர்களின் வெளியேற்றதால் எமது சுகாதார துறை மேலும் பலவீனம் அடைந்து வருகின்றது. எமது கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியும் எமக்கு தீர்வு கிடைக்காமையால் ஆர்ப்பாட்டத்தை செய்துள்ளோம்.இதற்கும் தீர்வு இல்லையெனில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்” எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment