TamilsGuide

2022 இல் 207 பில்லியன் ரூபாய் நோட்டுகளை அழித்தது மத்திய வங்கி 

கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கி அழித்துள்ளது.

நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நாணய புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

2021 இல் 44.3 பில்லியன் பெறுமதியான 108.2 மில்லியன் நாணயத் தாள்களை அழித்ததுடன் 2020 இல் 62.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான 127.3 மில்லியன் நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2019 ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 343.8 மில்லியன் சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment