TamilsGuide

சவோலா புயல் எதிரொலி - பிலிப்பைன்சில் 3.87 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

வெப்ப மண்டல புயலான சவோலா சீனாவின் தெற்கு பகுதியில் உருவானது. இந்தப் புயலால் பிலிப்பைன்சில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. ஒருவர் பலியானார். இந்நிலையில், பிலிப்பைன்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் கரையைக் கடந்தும் மழை பெய்து வருவதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, பிலிப்பைன்சை நோக்கி மேலும் ஒரு வெப்ப மண்டல புயல் வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Comment