TamilsGuide

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்படவுள்ளது


கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது .

இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெவித்துள்ளார்.
 

Leave a comment

Comment