TamilsGuide

உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிற்கு பல பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், சுரங்கங்கள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கான உபகரணங்களை உள்ளடக்கிய புதிய 250 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா உதவி வருகிறது. வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறிய ஆயுத வெடிமருந்துகளும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த உதவியானது, "போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளவும், அதன் மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைன் உதவும்" என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment