TamilsGuide

ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு  5000 டாலர்கள் நிதியுதவி வழங்கிய  அருள்மிகு ஆதிபராசக்தி குருமன்றம்.

ஸ்காபுறோவில் அருள்மிகு ஆதிபராசக்தி குருமன்றம். அமைத்து அதன் மூலம் ஆன்மீகப் பணியாற்றி வரும் சக்தி திருமதி ஞானம்மா திருநாவுக்கரசு, மன்றத்தின் சார்பில்  கடந்த 09-08-2023 அன்று ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு  5000 டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேற்படி நிதியுதவி கையளிக்கும் வைபவம் சென்றினரி வைத்தியசாலை வளாகத்தில்  இடம்பெற்றது. 

ஸ்காபுறோ அருள்மிகு ஆதிபராசக்தி குருமன்றமும். சக்தி  ஞானம்மா திருநாவுக்கரசு அவர்களும் கடந்த பல வருடங்களாக இவ்வாறான பல நற்பணிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment