TamilsGuide

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் விபத்து-7 பேர் காயம்

பம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி பயணித்த போதே தும்முல்லயிலிருந்து வந்த லொறி ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இரு பெண்களும் ஐந்து ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment