TamilsGuide

நாவலடியில் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களின் கட்டிடங்கள் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களின் கட்டிடங்களை  இன்று  (11) மாகாவலி அதிகார சபையினர் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் கொண்டு இடித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக சிலர் சட்டவிரோதமாக உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி கம்பி வேலிகளை  அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிஸார் காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் குறித்த பகுதியை விட்டு வெளியேறுவதற்கு 2 நாட்கள்  அவகாசம் வழங்கிச் சென்றனர்.

இந்நிலையிலேயே குறித்த பகுதியில் இன்று கட்டிடங்கள்  இடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

Leave a comment

Comment