TamilsGuide

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 35 ரூபாய்க்கு வழங்கப்படும்

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலையை 35 ரூபாக்கு வழங்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் இதனை துரிதப்படுத்த முடியும் என்றும் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கம் காரணமாக தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1,250 ரூபாயிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment