TamilsGuide

ஹவாய் காட்டுத் தீ விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

ஹவாயின் மெளயி தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹவாயின் சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான மெளயி-ல்(Maui) ஏற்பட்டுள்ள பயங்கரமான காட்டுத் தீயில் இதுவரை 55 பேர் உயிரிழந்து இருப்பதுடன் நூற்றுக்கணக்கான பேர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
அத்துடன் மாகாண கவர்னர் தெரிவித்த தகவலில், மெளவி தீவில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய பல ஆண்டு காலம் தேவைப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரலாற்று சுற்றுலா நகரமான லஹைனாவில்(Lahaina) 1000 வீடுகள் வரை தீயினால் சேதமடைந்து இருப்பதாக ஜோஸ் க்ரீன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தகவல் தொடர்பு அமைப்புகள் வீழ்ச்சியடைந்து இருப்பதால் பொதுமக்களின் இருப்பிடத்தை கண்டறிய மிகவும் சிரமமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “முக்கிய பேரழிவாக” வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

அத்துடன் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக பெடரல் நிதி விடுவிக்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.

இதனிடையே வியாழக்கிழமை 14,900 சுற்றுலா பார்வையாளர்கள் மெளயி தீவில் இருந்து விமானம் மூலம் வெளியேறி இருப்பதாக மெளயி மாகாண அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment