TamilsGuide

கனடாவில் பெண் ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி வரும் பொதிகள் 

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி அமேசன் நிறுவனத்தினால் பொதிகள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

என்கா நிட்டு(Anca Nitu ) என்ற பெண்ணுக்கு இவ்வாறு நாள்தோறும் பொதிகள் கிடைக்க பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்டர் செய்யாத பொருட்கள் இவ்வாறு அடிக்கடி தனக்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமானவை பெண்கள் அணியும் பாதணிகள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பொதிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதற்கு முயற்சி எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் வீட்டில் இல்லாத போதும் இந்த பொதிகள் கிடைக்க பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களை வேண்டாம் என சொல்வதற்கு முடியாத சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அமேசன் நிறுவனத்திற்கு பல தடவைகள் கூறிய போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கிடைக்கப்பெறும் பாதணிகள் தமக்கு பயனற்றவை எனவும் அவற்றை தான் பணியிடத்தில் இருப்பவர்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுத்து உதவுவதாக தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment