TamilsGuide

மளிகை விலை உயர்வால் தத்தளிக்கும் கனேடிய மக்கள்

கனடாவில் பணவீக்க விகிதம் பெருமளவு சரிவடைந்து காணப்பட்டாலும், பொதுமக்கள் தற்போதும் அதன் பலனை அனுபவிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் ஜூன் மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில் பணவீக்கம் 2.8 சதவீதம் என சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விகிதமானது 9.1 சதவீதம் என இருந்தது.
  
ஆனால் தற்போது உணவு பண்டங்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாதன் காரணம் நிபுணர்கள் தரப்பால் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில், வறட்சி, காட்டுத்தீ மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவால் கனடா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

இதனால் பண்ணைகளில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதுவே உணவு விலை அதிகரிப்புக்கு முதன்மை காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இன்னொன்று உக்ரைன் - ரஷ்யா போர். 2022 பிப்ரவரி முதல் இந்த நாடுகளில் இருந்து போதுமான தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம்.

இதனால், எஞ்சிய நாடுகளில் கோதுமை, உரம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இன்னொரு காரணம், வேளாண் துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதும், உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு காரணமாக கூறுகின்றனர்.

இந்தச் சூழலில், 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது நால்வர் கொண்ட ஒரு கனேடிய குடும்பம் உணவுக்கு என சராசரியாக 1,065 டொலர் அதிகமாக செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment