TamilsGuide

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு  கௌசல்யா நவரத்தினம் திடீர்  விஜயம்

யாழில்  அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார்.

குறித்த அலுவலகத்தின்  தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி  மகேஷ் கட்டுலந்த அவர்களின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன் போது குறித்த அலுவலகத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கௌசல்யா நவரத்தினம் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் குறித்த அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன், யாழ் பிராந்திய இணைப்பாளர் செல்வகுமார்,ஜனாதிபதியின் மேலதிக இணைப்பாளர்  இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment