TamilsGuide

லண்டன் மக்களுக்கு பேரிடியாக மாறவிருக்கும் வாடகை கட்டணம் - எச்சரிக்கும் நிபுணர்கள் 

லண்டனில் சராசரி வாடகை கட்டணமானது மாதம் 2,700 பவுண்டுகள் தொகையை எட்டும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குடும்பங்கள் ஏழ்மை நிலைக்க்ய் தள்ளப்படும் அபாயம் இருப்பதுடன், தெருவில் இரவைக் கழிக்கும் நிலையும் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது லண்டனில் சராசரியாக மாதம் 2,567 பவுண்டுகள் வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் 2024 முதல் லண்டன் மக்கள் மேலதிகமாக 133 பவுண்டுகள் செலுத்த நேரிடும் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், லண்டன் கவுன்சில்களின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் லண்டனில் 50 பேரில் ஒருவர் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கம் வாடகை கட்டண உயர்வை இரண்டு வருடத்திற்கு முடக்க வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் பரப்புரை செய்து வருகிறார். தலைநகரில் வசிக்கும் அனைவரில் தனியார் வாடகைதாரர்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் என கூறும் மேயர் சாதிக் கான், ஆனால் அவர்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை என்றே  குறிப்பிடுகிறார்.

இதனிடையே, வாடகை கட்டணம் அதிகரிப்பதால் தற்போதைய சூழலில் குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதுடன், தெருவிற்கு செல்லும் நிலை ஏற்படும் என ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இதனாலையே, மேயர் சாதிக் காக் முன்வைக்கும் கோரிக்கையை தாங்கள் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சராசரியாக ஒரு வாடகைதாரர், அவரின் ஊதியத்தில் 40 சதவீதம் வரையில் வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதுடன், இதில் எந்த முன்னேற்றமும் தங்களால் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வாடகை கட்டணம் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் என்றால், லண்டன் நகரில் குடியிருக்கும் செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்கள் நகரை விட்டு வெளியேறும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டுக்கு 33,000 பவுண்டுகளுக்கு குறைவாக சம்பாதிக்கும் ஒரு லண்டன்வாசி, தற்போதைய வாடகைத் திட்டத்தின் கீழ் வாழ தகுதிபெறும் அளவுக்கு தாம் சம்பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment