TamilsGuide

மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை

இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment