• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் இசையுலகில் முடி சூடா மன்னனாக வாழ்ந்தவர் டி.எம் சவுந்தர்ராஜன்

சினிமா

டி. எம் சௌந்தரராஜன்
இவரின் காதல், துள்ளல், சோகம், தத்துவம் என கலவையான பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார், மேலும் அரசியல் காட்சிளை உயர்த்தி 4 ஆயிரம் பாடல்கள், 3 ஆயிரம் பக்தி பாடல்கள் என நாற்பது ஆண்டுகாலம் தமிழ் இசையுலகில் முடி சூடா மன்னனாக வாழ்ந்தவர் 
டி.எம் சவுந்தர்ராஜன். 
தற்போது திரையிசை திறமை கொண்ட பாடகர்கள், புதிய தொழில் நுட்பங்கள் என பலவிதமாக மாறி விட்டாலும் டி.எம்.எஸ் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது.

இவர் பாடிய அரசியல் பாடல்கள் காட்சிகளின் கொள்கைகளை பரப்பியது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீகிக்காது இருக்கின்றன. “நான் அணையிட்டால் அது நடந்து விட்டால்” பாடல் இன்று வரையில் அதிமுகவின் அரசியல் மேடைகள் ஒழித்து கொண்டிருக்கிறது. மேலும் மு. கருணாநிதியின் பிடித்தமான பாடகராக இருந்தவர் டி.எம்.எஸ் ஆனால் இவர் இருந்த போதும் சரி மறைந்த போதும் சரி இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
டி எம் எஸ் அவர்களுக்கு கடந்த 
28-03-1946 ஆம் ஆண்டு அதாவது, 
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே 
திருமணம் நடைபெற்றது. டி எம் எஸ் அவர்கள் சுமுத்திராவை என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். 
அன்று அவரின் திருமண நாளில் அவரின் திருமண  பத்திரிகையின் கடைசியில் தங்கள் ரேஷன் அரிசியை இரண்டு தினங்களுக்கு முன்னதாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது இந்த வரிகள் 
சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் இருந்த அரிசி தட்டுப்பாடு நிலைமையை தெளிவுபடுத்துகிறது.

 

Prashantha Kumar

Leave a Reply