• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரு எச் வி . ஹண்டே

தமிழ்நாடு

திரு எச்  வி . ஹண்டே  (இன்று  வயது  100)
• பிறப்பு. இவர் 1927-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார்.
• மருத்துவப் பணி. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், 1984-ஆம் ஆண்டு சென்னையில் புகழ்பெற்ற 'ஹண்டே மருத்துவமனையை' (Hande Hospital) நிறுவினார்.
அரசியல் பயணம்
• ஆரம்பகால அரசியல். மூதறிஞர் ராஜாஜியின் அரசியல் சீடரான இவர், சுதந்திரா கட்சியின் சார்பில் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் சென்னை பூங்கா நகர் (Park Town) தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• அமைச்சர் பதவி. பின்னர் அதிமுகவில் இணைந்த இவர், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1980 முதல் 1987 வரை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) பாதிப்பு குறித்த அறிவிப்பை 1986-இல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டவர் இவரே.
------- இவர் சுதந்திரா  கட்சியில்  இருக்கும்போதே  எனக்கு  சிறுவயதில்  நன்கு  தெரியும் . இவர்  ராஜாஜியின்  உண்மை  சீடர் . எம்ஜிஆர்  மீது  ராஜாஜிக்கு  தனி  பாசம்  உண்டு . காரணம்  மதுவிலக்கு  கொள்கையில்  எம்ஜிஆர்  , ராஜாஜி  இருவரும்  ஓரே  கருத்தை  கொண்டிருந்தார்கள் 
அதாவது  எம்ஜிஆர்  திமுகவில்  இருக்கும்போதே  இந்த  கொள்கையில்  உறுதியாக  இருந்தார் 
1972 க்கு  பிறகு  கருணாநிதி  ஆட்சியில்  மதுக்கடை  அதாவது  கள்ளுக்கடை திறந்தார் . அதை  காமராஜரும்  எதிர்த்தார் .
அப்போது  கருணாநிதி , காமராஜரை  பார்த்து , வெளிநாட்டில்  பணத்தை  பதுக்கி  வைத்துள்ளார்  என்று  அபாண்ட   பழியை சுமத்தினார் . அன்றைய  பத்திரிக்கையில்  வெளிவந்ததை  சிறுவனாக  இருந்த  நானே  படித்துள்ளேன் . அதை  பார்த்த  காமராஜர், தன்  மீது   இன்னும்  ஏதும்  அபாண்ட பழி  அஞ்சாமல் சொல்வார்  கருணாநிதி  என்று  வாயை  மூடிக்கொண்டார் காமராஜர்   (பாவம்  காமராஜர் நல்ல  மனுஷன்  அல்லவா  அவர் )
எம்ஜிஆரிடம்  உள்ளவர்கள்  எல்லாம்  திமுக பிடிக்காமல்  அவருடன்  1972 யிலேயே  விசுவாசமாக  வெளியேறி  வந்தவர்கள்  என்பதில்  எல்லோருக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டது . 1980 இல்  எம்ஜிஆர்  பாராளுமன்ற  தேர்தலில்  2 இடங்களில்  மட்டுமே  வெற்றிபெற்றதால்  பல  முன்னாள்  அமைச்சர்களுக்கு  திமுகவில்  வலைவிரிக்கப்பட்டது .
அந்த  நேரத்தில்  அதிமுகவில்  நல்ல  படித்த  நபர்கள்  தேவைப்பட்டபோது , இதே  எச்  வி  ஹண்டே  தனது  சுதந்திரா  கட்சியை  கலைத்துவிட்டு  அதிமுகவில்  எம்ஜிஆரிடம்  வந்து  சேர்ந்தார் .
1980 இல்  அண்ணா நகரில் கருணாநிதி உடன்  எச் வி  ஹண்டே  அதிமுக  சார்பில்  போட்டியிட்டார் 
மிக  குறைந்த வித்தியாசம்  800 வாக்குகள்  வித்தியாசத்தில்  கருணாந்தி  வெற்றிபெற்றார் .
உண்மையில்  கருணாந்தி  தோற்றதுதான்  உண்மை என்று  இன்று  வரை  பேசப்படுகிறது  காரணம் , தந்து  நண்பர்  திரு  கருணாநிதி  அரசியலில்  இருக்கவேண்டும்  என்றும்  எம்ஜிஆர்  அவர்களே  பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து , கருணாநிதியே  ஜெயித்ததது  போலவே   அறிவிக்கப்பட்டது   என்று  அப்போது  ஒரே  பேச்சு .இன்றுவரை  அது  நீடிக்கிறது ...
1984 இல்  எம்ஜிஆர்  அமெரிக்காவில்  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் . அப்போது  அவரை பார்த்துவர  யாரை  அனுப்பலாம்  என்று  பேசபப்ட்டபோது , ஆர்  எம்  வீரப்பன்  அவர்கள்  மருத்துவஅமைச்சர்  ஹண்டே  அவர்களையே  பரிந்துரை செய்து  அனுப்பினார் 
அமெரிக்காவில்  இருந்து  வந்த  ஹண்டே , எம்ஜிஆர்  எப்படி  இருக்கிறார் ? என  நிருபர்கள்  கேட்டபோது , எம்ஜிஆர்  உடல் நலம்  நன்றாக  உள்ளார் . சிறிது  பேச  முயற்சிக்கிறார்  என்றும் எல்லோரையும்  அடையாளம்  கொண்டுகொள்கிறார்  என்றும்  பேட்டி  கொடுத்தார் 
மறுநாள்  கருணாநிதி , எம்ஜிஆர்  செயலாற்ற  மனிதராக  மருத்துவமனையில்  வெறுமனே  வைத்துள்ளனர் . "ஹண்டே  புளுகு  அண்டப்புளுகு"  என்று  அபாண்டமாக  சொன்னார் .
அடுத்து , நடிகர்  பாக்கியராஜ்  அவர்கள்  சென்று  பார்க்கப்போனார் . அவர்  திரும்பி  சென்னை  வந்ததும் , எம்ஜிஆர்  நன்கு  என்னிடம்  பேசினார்  என்றும் , வாசல்வரை  என்னை  வந்து  வழியனுப்பினார் என்றும்  பேட்டி  அளித்தார் ..
அப்போதும்  கருணாநிதி , (நக்கலாக ) இது  "முருங்கைக்காய்  நடிகர்" பேச்சுக்கெல்லாம்  ஆதாரமே  இல்லை  என்றார் .
மறுநாள் திரு  பாக்கியராஜ் , வேண்டுமானால்  எம்ஜிஆர்  உடன்  நான்  எடுத்துக்கொண்ட  புகைப்படம்  காண்பிக்கட்டுமா ? என்றாரே  பார்க்கலாம் .
அத்தோடு  கருணாந்தி  கப்  - சிப்  ஆனது  வரலாறு ...! 

Abdul Salam
 

Leave a Reply