நடிகை பவித்ரா லட்சுமி படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் அதிகம் பாப்புலர் ஆனார்.
ஒரு வருடத்திற்கு முன் பவித்ரா லட்சுமி உடல்நிலை மோசமானதால் மெலிந்து போய் இருந்த நிலையில், சிலர் அவர் தோற்றத்தை விமர்சித்தனர். அதில் இருந்து மீண்டு வந்த பவித்ரா தற்போது மீண்டும் பழைய லுக்கிற்கு திரும்பி இருக்கிறார்.
பவித்ரா தற்போது மேகாலயாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் சிரபுஞ்சியில் ஷார்ட் உடையில் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டிலைகளை தற்போது வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்களை கவர்ந்து லைக்குகள் குவிந்து வருகிறது.


