TamilsGuide

அணு ஆயுத உற்பத்தியை மேலும் அதிகரிக்க கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், 2 அணுசக்தி மூலப்பொருள் உற்பத்தி ஆலைகளைப் பார்வையிட்டதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதில் ஒரு ஆலை புதிதாகத் திறக்கப்பட்டது என்றும் மற்றொரு ஆலை விரிவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அணுசக்தி தொடர்பான உபகரணங்கள் தயாரிக்கும் தளம் மற்றும் அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மேலும் பல அணு ஆயுதங்களை உருவாக்க கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். கொரிய தீபகற்பத்தை நோக்கி ஒவ்வொரு கணமும் அதிகரித்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக, வடகொரியாவின் தற்காப்புத் திறனை வலுப்படுத்தும் முயற்சி இதுவாகும் என்று கிம் ஜாங் உன் கூறியதாக அரசு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment