• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு சிறிய ஊக்கிற்குப் பின்னால், சோக வரலாறு ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நாம் ஒவ்வொரு நாளும் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒரு சிறிய ஊக்கிற்குப் பின்னால், ஒரு அறிவாளியின் கண்ணீரும் ஏமாற்றமும் நிறைந்த சோக வரலாறு ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தேவையாக மாறிய Safety Pin கண்டுபிடிக்கப்பட்ட விதமும், பின்னர் அது கண்டுபிடிப்பாளரின் கையை விட்டுப் போன விதமும் நெஞ்சை உருக்கும் ஒரு உண்மைக் கதை!
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் வோல்டர் ஹேன்ட் (Walter Hunt).
இயல்பிலேயே அபாரமான அறிவாற்றல் கொண்ட வோல்டர் ஹேன்ட், எப்போதும் எதையாவது புதிதாகச் சிந்தித்துக் கொண்டே இருக்கும் ஒரு  கண்டுபிடிப்பாளர்.

ஆனால், வியாபார நுணுக்கம் தெரியாததால் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வறுமையிலும் கடன் தொல்லையிலுமே கழித்தார்.
1849ஆம் ஆண்டு, வோல்டர் ஹென்ட் தனது நண்பர் ஒருவருக்கு 15 டொலர்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தது.
அந்தச் சிறிய கடனைக் கூடத் திருப்பிச் செலுத்த முடியாமல், பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தனது மேசையில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
அப்போது, அவரது மேசையில் கிடந்த ஒரு சிறிய பித்தளைக் கம்பியை  எதேச்சையாகக் கையில் எடுத்து, தனது விரல்களால் வளைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
சாதாரண ஊசிகள் துணிகளில் குத்தும்போது கையில் காயம் ஏற்படுத்துவதை மனதில் கொண்ட அவரது சிந்தனை, அந்தக் கம்பியை ஒரு புதிய வடிவத்திற்குள் கொண்டு சென்றது.
கம்பியின் ஒரு முனையைச் சுருள் (Spring) போல வளைத்து, மறுமுனையில் கூர்மையான ஊசி பாதுகாப்பாக மூடிக்கொள்ளும் வகையிலான ஒரு பூட்டை வடிவமைத்தார்.
தற்செயலாகக் கையில் எடுத்த ஒரு சாதாரணக் கம்பியிலிருந்து, வெறும் மூன்று மணி நேரத்தில் உலகின் முதல் நவீன  Safety Pin அவரது கைகளில் உருவானது!
1849ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி, இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை  வோல்டர் ஹென்ட் முறைப்படி பதிவு செய்தார்.
ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் காலத்தின் மிகப்பெரிய சோகம்!
அவரது அறிவு ஒரு அற்புதமான பொருளை உருவாக்கிவிட்டது; ஆனால், அவரைச் சூழ்ந்திருந்த வறுமையும் கடனும் அந்தக் கண்டுபிடிப்பை அவரிடமே இருக்க விடவில்லை!
நண்பருக்குக் கொடுக்க வேண்டிய 15 டொலர் கடனை அடைக்க வேறு எந்த வழியும் இல்லாததால், வேறு வழியின்றி தனது அரிய கண்டுபிடிப்பின் காப்புரிமையை W.R. Grace and Company என்ற நிறுவனத்திற்கு வெறும் 400 டொலர்களுக்கு மொத்தமாக விற்றுவிட்டார்!
அந்தப் பணத்தில் தனது 15 டொலர் கடனை அடைத்துவிட்டு, மீதமிருந்த பணத்தைத் தனது அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
அவரது வறுமையைப் பயன்படுத்தி வெறும் 400 டொலருக்கு அந்த உரிமையை வாங்கிய நிறுவனம், சேஃப்டி பின் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து கோடிக்கணக்கான டொலர்களை இலாபமாக அள்ளியது!
ஆனால், அந்த அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கிய வோல்டர் ஹென்ட்டிற்கு, அந்த 400 டொலருக்குப் பிறகு ஒரு சல்லிக்காசு கூட ரோயல்டியாகக் கிடைக்கவில்லை.
தையல் இயந்திரத்தின் முக்கியப் பாகமான லாக்ஸ்டிட்ச்' (Lockstitch) உட்படப் பல முக்கியக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், வறுமையின் காரணமாக அவற்றின் உரிமைகள் அனைத்தும் அவரிடமிருந்து கைமாறிப் போக, 1859ஆம் ஆண்டு வறுமையிலேயே காலமானார் 
அந்த அறிவாளி.
ஒரு கண்டுபிடிப்பாளனின் அறிவு உலகிற்குப் பயன்பட்ட அளவிற்கு, அவனது வறுமை அந்த வெற்றியை அவனிடமிருந்து பறித்துச் சென்றது வரலாற்றின் மிகப்பெரிய சோகம்!
 

 

Leave a Reply