பிக் பாஸ் சீசன் 10-ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்களிடையே பிரபலமானவர் முத்தழகி. இந்த நிகழ்ச்சியை தாண்டி கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான டோரதி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், 70 நாட்களுக்கு பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முத்தழகி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மழையில் நனைந்தபடி இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் தற்போது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


