TamilsGuide

ஹிட் கொடுத்த இரண்டாவது வாரத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நஸ்லீன்

நஸ்லீன் மலையாள சினிமாவின் யங் ராக் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர்.

நஸ்லீன் இதுவரை நடித்த எந்த படங்களும் மோசமான படம் என்றே சொல்ல முடியாத படி எல்லா படங்களையும் ரசிகர்கள் ரசித்தனர்.

அதிலும் சமீபத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இவர் நடித்த சீன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொண்டாடி தீர்க்கப்பட்டது.

நஸ்லீன் மார்க்கெட் அனைத்து இடங்களிலும் நல்ல ரீச் ஆனது. இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த பிறகு இவர் நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் பேச்சுலர் பார்ட்டி படம் வெளிவந்தது.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் இதன் மொத்த வசூலே வெறும் 6.25 கோடி ரூபாய் தானாம் தற்போது வரை, இதனால் சீன் ரிலிஸான அடுத்த இரண்டே வாரத்தில் மிகப்பெரிய தோல்வி படத்தை நஸ்லீன் கொடுத்துவிட்டார், இதிலிருந்து அவர் மீண்டு வருவாரா? என்பதே தற்போது எல்லோரின் எதிர்பார்ப்பும்.
 

Leave a comment

Comment