TamilsGuide

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலகச்சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று காலை ( 24) வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.45 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 3.5% வீழ்ச்சியாகும்.

அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 89.63 அமெரிக்க டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் சரிவு 3.5% ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்து 89.29 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மோதல்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்ட நிலையில் அதன் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
 

Leave a comment

Comment