TamilsGuide

அரசியலில் களமிறங்கும் ராஜபக்ச குடும்ப பெண்! சர்ச்சைகளினால் கடும் மன அழுத்தத்தில் மகிந்த

எயார்பஸ் ஒப்பந்த மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், அவரது மனைவி லிமினி ராஜபக்சவுக்கு எதிரான பிரச்சாரமும் ராஜபக்ச குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச அரசியலில் களமிறங்குவது குறித்த தகவல்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசப்பட்டு வருகின்றது.

இந்தக் கூற்று தொடர்பாக நாமல் ராஜபக்சவோ அல்லது அவரின் தரப்பினரோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினாலும், நாமல் ராஜபக்ச சிறையில் உள்ளமையினாலும் மகிந்த ராஜபக்ச கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ச மீதான அதே குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஷமிந்திர ராஜபக்ச மற்றும் பிரியங்கா நியோமாலி ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், இது நாமலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.

குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ நிலை

இருப்பினும், 20ஆம் திகதியன்று, கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ நிலையை காரணம் காட்டி, நாமல் ராஜபக்ச பிணை கோரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, இதற்கு ஆதரவாக அவர் சர்வதேச வழக்கு சட்டங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களில் கூட ஒருமித்த கருத்து இல்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.   
 

Leave a comment

Comment