TamilsGuide

கனடாவில் இந்திய பெண்ணுக்கு மாபெரும் அதிஸ்டம் - லாட்டரியில் 5 மில்லியன் டாலர்

கனடாவில் வசிக்கும் இந்தியா கேரளாவை சேர்ந்த ஸ்னேகா ஜாய் என்கிற பெண்ணுக்கு 5 மில்லியன் டாலர்  அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா ஜாய்.

இவர் கடந்த 2020ம் வருடம் கேரளாவில் இருந்தபோது ஊராட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு போட்டியிட்டார். அப்போது 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின் சினேகா ஜாய் கனடாவுக்கு குடி பெயர்ந்தார்.

அங்கு கணவருடன் வசித்து வரும் அவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் LOTTO6/49 லாட்டரியில் அவருக்கு 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 கோடி) அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ரூ.30 கோடியை வீட்டு கடனை அடைக்கவும், உலகம் முழுவதும் சுற்றுலா செல்லவும் பயன்படுத்துவேன் என ஸ்னேகா கூறியிருக்கிறார்

Leave a comment

Comment