மிதிகம, குருபெவில பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று (23) பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் பயணித்த வாகனம் ஒன்று ரயிலுடன் மோதியதில், நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஜீப் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்றபோது, அந்த ஜீப்பில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
காயமடைந்த நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த விபத்து மிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.


