முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரை எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


