TamilsGuide

2.7 கோடி சம்பளம் வாங்கும் Google ஊழியர் வாழும் எளிமையான வாழ்க்கை - காரணம் என்ன?

Google Worker Earns 323K dollar But Lives Frugally: ஆண்டுக்கு ரூ.2.7 கோடி சம்பளம் வாங்கும் Google ஊழியர், குறைந்தபட்ச ஊதிய வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிக்கும் 26 வயதான Charles Broomfield என்ற Google நிறுவனத்தின் AI பாதுகாப்பு பகுப்பாய்வாளர் (AI Security Analyst), இந்த ஆண்டு சுமார் 3,23,000 அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ.2.7 கோடிக்கும் அதிகம்) வருமானம் ஈட்ட உள்ளார்.

ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் இன்னும் குறைந்தபட்ச ஊதிய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார்.

Google-ல் பணிபுரிவதுடன், YouTube உள்ளடக்க உருவாக்குநராகவும் இருக்கும் Charles Broomfield, கடந்த சில ஆண்டுகளாக தனது அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஆண்டுக்கு 20,000 டொலருக்கும் குறைவாகவே வைத்திருக்கிறார்.

இது அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் முழுநேர ஊழியரின் ஆண்டு வருமானத்தை விடக் குறைவு என CNBC தெரிவித்துள்ளது.

செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக அவர் நான்கு நண்பர்களுடன் இணைந்து ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். சொந்த கார் வாங்காமல் நடந்து செல்வதையோ, மிதிவண்டி பயன்படுத்துவதையோ அல்லது பொது போக்குவரத்தையோ தேர்வு செய்கிறார். மேலும், பெரும்பாலான உணவுகளை Google அலுவலகத்திலேயே இலவசமாக சாப்பிடுவதால், உணவுக்கான செலவும் மிகவும் குறைந்துள்ளது.

“பொருட்களை வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. எனக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே இருக்கிறது என்று நான் உணர்கிறேன்,” என்று Charles Broomfield கூறியுள்ளார்.

அவரது முக்கிய இலக்கு - நிதி சுதந்திரம்

இளம் வயதிலேயே நிதி சுதந்திரத்தை (Financial Independence) அடைய வேண்டும் என்பதே அவரது முக்கிய இலக்காகும். 17 வயதில் FIRE (Financial Independence, Retire Early) இயக்கம் பற்றிய தகவல்களை அறிந்த அவர், அதிக அளவில் சேமித்து முதலீடு செய்யத் தொடங்கினார்.

தற்போது அவரது முதலீட்டு சொத்து மதிப்பு சுமார் 6,50,000 டொலராக உயர்ந்துள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்குள் 7,50,000 டொலர் முதலீட்டு இலக்கை எட்டுவேன் என்று அவர் நம்புகிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அவர் சம்பாதித்த வருமானத்தில் சுமார் 90 சதவீதத்தை முதலீடு மற்றும் சேமிப்புக்கு ஒதுக்கியுள்ளார். அந்த மாதத்தில் அவர் 17,931 டொலரை முதலீடு செய்திருந்தார். வீட்டு வாடகை மற்றும் பயன்பாட்டு செலவுகளுக்கு 1,098 டொலரும், போக்குவரத்துக்கு வெறும் 48 டொலரும், உணவுக்கு 28 டொலரும் மட்டுமே செலவிட்டார்.

Google-ல் சேர்வதற்கு முன்பு ஆண்டுக்கு 1 லட்சம் டொலர் சம்பளம் பெற்ற அவர், பின்னர் Amazon Web Services மற்றும் பிற நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு வருமானத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இருப்பினும் வாழ்க்கை முறையை மாற்றாமல் தொடர்ந்து சிக்கனமாக வாழ்ந்து வருகிறார்.

நிதி சுதந்திரத்தை அடைந்த பிறகும் முழுமையாக ஓய்வு பெறும் திட்டம் இல்லை எனக் கூறும் Charles Broomfield, எதிர்காலத்தில் AI பாதுகாப்பு துறையில் சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பதே தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment