TamilsGuide

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியா லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் செக்கன் பொழுதுகளில் அரங்கேற்றப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் வீடுகள் உட்பட பல வீடுகளில் பெறுமதியான கார்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் ஹாரோ பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஹூண்டாய் அயோனிக் 5' காரை நோக்கி இருவர் நடந்து வருவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அவர்களில் ஒருவர் சாரதி இருக்கை பக்கமாக சென்று கதவைத் திறந்து காரை ஓட்டிச் சென்றுள்ளார். கார் பூட்டப்பட்டிருந்ததாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

காரின் இலத்திரனியல் சாவியைப் போன்று செயற்படும் கருவியைப் பயன்படுத்தி அந்தத் திருட்டு நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இது குறித்து தமிழர்கள் மிகவும் அவதானத்துடன் தமது வாகனங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   
 

Leave a comment

Comment