TamilsGuide

எல்.கே.சுதீஷ் எம்.பி. மகள் திருமண வரவேற்பு: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் நேரில் வாழ்த்து

தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி. - பூர்ண ஜோதி தம்பதியரின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ மற்றும் அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் அரங்கில் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்தத் திருமண வரவேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு, மணமக்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர்.

விழாவிற்கு வருகை தந்த முக்கியப் பிரமுகர்கள் அனைவரையும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

மணமக்களை வாழ்த்துவதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், வெங்கடரமணன், ராஜ்மோகன், டாக்டர் அருண்ராஜ், ரமேஷ், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, வி.கே.சசிகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர்கள் விக்ரம், நெப்போலியன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முன்னாள் டி.ஜி.பி. ரவி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்.

இவர்களுடன் தே.மு.தி.க. தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி, மாவட்டச் செயலாளர்கள் சூர்யா, ஆனந்தன், பழனி, பிரபாகரன், வேல்முருகன், செந்தில்குமார், மாறன், சங்கர், வழக்கறிஞர் ஆக்கூர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 

Leave a comment

Comment