A Young girl died suddenly in Istanbul, The investigation linked her case to at least 12 other similar tourist deaths: இஸ்தான்புல்லில் கனேடிய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அதேபோல் 12 வழக்குகள் இருக்கும் விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததைக் கொண்டாடுவதற்காக துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார் கனேடிய இளம்பெண்ணொருவர்.
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற அவர், மறுநாள் உயிரிழந்துவிட்டார்!
அந்த இளம்பெண்ணின் பெயர் Bérengère Deveaux-Cattino (24). மொன்றியலைச் சேர்ந்த அவர், தனது நெருங்கிய தோழிகள் சிலருடன் துருக்கிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இது நடந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம்.
துருக்கியில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, தனது நீண்ட நாள் கனவான இஸ்தான்புல் நகரத்தைக் காண தோழிகளுடன் புறப்பட்டுள்ளார் Bérengère.
Seven Days Hotel என்னும் ஹொட்டலில் அவர்கள் அனைவரும் தங்கியிருந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றுள்ளனர் Bérengèreயும் அவரது தோழியான Laurieயும்.
மறுநாள் காலை இருவருக்கும் பயங்கர வாந்தி ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் Bérengère உயிரிழந்துவிட்டார்.
துருக்கி மருத்துவமனை மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில் Bérengèreயின் மரணத்துக்குக் காரணம் food poisoning என கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் திருப்தியடையாத Bérengèreயின் பெற்றோர் கனேடிய அதிகாரிகளை அணுக, அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், மரணத்துக்குக் காரணம் food poisoning என்பதை அவர்களால் உறுதி செய்யமுடியவில்லை.
ஏனென்றால், food poisoning பாதிப்பு ஏற்பட்டால், வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படும். ஆனால், Bérengèreக்கு வாந்தி மட்டும்தான் ஏற்பட்டுள்ளது, வயிற்றுப்போக்கு இல்லை.
இந்நிலையில், Enquête மற்றும் the fifth estate என்னும் இரண்டு ஊடகங்கள் Bérengèreயின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளன.
துருக்கி ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம், 2023ஆம் ஆண்டிலிருந்து, துருக்கியில் சுமார் 30 பேர் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளார்கள், 12 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள்.
அவர்களில், ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த Servet (38), அவரது மனைவியான Cigdem Bocek (27), பிள்ளைகள் Masal (3) Kadir Muhammet (6), ஆகியோரும் அடங்குவர். அவர்களும் food poisoning காரணமாக உயிரிழந்ததாகவே முதலில் கூறப்பட்டது.
பின்னர், Servet குடும்பம் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி ஒன்றே அவர்கள் உயிரிழக்கக் காரணம் என தெரியவந்தது.
Bérengèreயும் அவரது தோழியரும் கூட, Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டலுக்கு அருகிலுள்ள ஒரு ஹொட்டலில்தான் தங்கியிருந்துள்ளார்கள்.
ஆக, Bérengère உயிரிழந்ததற்கும் அந்த பூச்சிக்கொல்லி மருந்துதான் காரணமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
2026 கோடையின்போது, கனடா அரசு துருக்கி சுற்றுலா தொடர்பான பயண ஆலோசனையில், இஸ்தான்புல் ஹொட்டல்களில் தங்குபவர்கள் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 15ஆம் திகதி, கனேடிய அதிகாரிகளைத் தொடர்புகொண்ட துருக்கி தூதரக அதிகாரிகள், Bérengère வழக்கு தொடர்பான விசாரணை தொடர்வதாக தெரிவித்துள்ளார்கள்.


